Friday, September 27, 2013



நடிகர் : ஷாம்
நடிகை :பூனம்
இயக்குனர் :வி.இசட். துரை
இசை :ஸ்ரீகாந்த் தேவா
ஓளிப்பதிவு :கிருஷ்ணசாமி-


ஷாம்- பூனம் தம்பதியர் தங்களின் ஒரே மகனின் 6-வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மகனை தவற விடுகிறார்கள். தொலைந்து போன மகனை தேடி அலைகிறார்கள். கிடைக்காத சூழ்நிலையில் காவல் துறையில் தகவல் தெரிவிக்கிறார்கள்.


காவல்துறையினர் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்காததால், குழந்தைகளை கடத்தும் கும்பல்களிடம் அழைத்துச் செல்லும்படி ஒரு கான்ஸ்டபிளிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார் காவல்துறை ஆய்வாளர். அங்கு சென்று விசாரித்தபோது ஷாமின் மகனை கடத்தல் கும்பல் கடத்தியிருப்பது தெரிய வருகிறது. இதற்கு போலீஸ் எந்த உதவியும் செய்ய முடியாத சூழலில் தன் மகனைத் தேடி ஷாமே அலைகிறார்.


குழந்தையை மாநிலம் மாநிலமாக மாற்றி மாற்றி கொண்டு செல்கிறது கடத்தல் கும்பல். அந்த கும்பலில் உள்ள ஒவ்வொருவரையும் பிடித்து பின்தொடர்கிறார் ஷாம். கடைசியில் தன் மகனை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தாரா? என்பது மீதிக்கதை.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முழுப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ஷாம். ஆனால் அந்த கதாபாத்திரம் சரியாக பொருந்திய அளவில் அவரிடம் நடிப்பிலும் பேச்சிலும் பொருத்தமில்லை. இந்த படத்திற்காக பல்வேறு தோற்றங்களில் தோன்றுகிறார். அது படத்திற்கு எந்த வித பயனையும் தரவில்லை. மகனை இழந்த தந்தை படும் வேதனைகளை இன்னும் அழகாக சொல்லியிருக்களாம். இது போன்ற மலையளாத்தில் “ஓர்ம மாத்ரம்”
என்ற படத்தில் அழகாக சொல்லியிருப்பார்கள்.


மகனை இழந்து தாய் படும் வேதனையையும், வலியையும் தன் நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திருக்கிறார் பூனம். குறிப்பாக தன் மகனை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஒரு பிச்சைக்காரன் காலைப் பிடித்து கெஞ்சும் காட்சி திரையரங்குகளில் உள்ளவர்களின் கண்களை கலங்க வைக்கிறது. படத்தில் தேவையில்லாத பாத்திரங்கள் சம்மந்தமில்லாமல் வருவதை தவிர்த்திருக்கலாம். திருப்பங்கள் தேவை என்பதற்காக குழந்தைகளை கடத்தும் கும்பலை ஏகப்பட்ட நபர்களை காட்டியிருப்பது அலுப்பை தட்டுகிறது.



ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ஒன்றுமே இல்லை, அவருக்கு டப்பாங்குத்துதான் சரியாக வரும். கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் ஒரு பலம்.



கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் வி.இசட். துரை. பாடல்கள் வேறுயாராவது எழுதியிருந்தால் பாடல்கள் மனதில் நின்றிருக்கும். வித்தியாசமான கதைக் களம் என்று கூறி அஞ்சாதே, யுத்தம் செய் பான்யில் கதை பன்னியிருக்கின்றார்.  படத்திற்காக நீண்ட நாட்கள் உழைத்திருப்பது வீன். தன் மகனுக்காக தன் வாழ்கையையே தொலைக்கும் தந்தை, நல்ல மனிதனுக்கு தவறு செய்துவிட்டோமே என்று வருந்தி கடைசி வரை கூடவே இருந்து உயிரை விடும் டிரைவர் என படம் முழுக்க அழுத்தமான கதாபாத்திரங்களை அருமையாக கையாண்டிருக்கும் இயக்குனரை பாராட்டலாம். மொத்தத்தில் மெழுகுவர்த்தி சரியான சுடரில்லை.

No comments:

Post a Comment