Friday, September 27, 2013

த மேக்கிண்டஷ் மேன் (1973 – USA ) படத்தைப் பற்றி ஒரு அறிமுகம்.
98 நிமிடம் போகக்கூடிய திரில்லர் வகைப்படம். படத்தின் இயக்குநர் – ஜான் ஹஸ்டன் ஆவார்.

கதைச் சுருக்கம்:
டைரக்டர் ஜான் ஹூஸ்டனின் இந்தப் படம் ஒரு ஸ்பை திரில்லர் வகைப்படம். பால் நியூமன் ஒரு அரசு சீக்ரெட் ஏஜெண்ட். ஒரு ரஷ்ய உளவாலியையும், அவன் கும்பலையும் பிடிக்க ஒரு வைரத் திருட்டை செய்து ஜெயிலுக்கு போகிறார். ஜெயிலில் மற்ற கைதிகளோடு பழகி அவர்களுக்கு நம்பிக்கை வரும் அளவிற்கு நடந்து கொள்கிறார். ஜெயிலிலே ஒரு ஏஜெண்ட் மூலம் அங்கிருந்து தப்பித்து போவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பிளான் பண்ணியபடி ஒரு நாள் அவர்களது ஓய்வு நேரத்தில் கைதிகளுக்குள் குழப்பம் ஏற்படுத்தி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி ஒரு கிரேன் மூலம் பால்நியூமனும் இன்னொரு கைதியும் தப்பிக்கிறார்கள். கிரேன் வெளியே தூக்கிப் போனதும் பைக் காத்திருக்கிறது. பைக்கை ஒரு ராட்சச வேன் விழுங்குகிறது.



உள்ளே போனதும் இருவருக்கும் மயக்க மருந்து தரப்படுகிறது. மூண்று நாட்களுக்குப் பிறகு பால்நியூமன் கண் விழிக்கும் போது, தான் எங்கிருக்கிறோம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் பால்நியூமன் ஒரு போலீஸ் உளவாளி என்பதைக் கண்டுபிடித்து விடுகின்றனர். பால்நியூமன் சித்திரவதை செய்யப் படுகிறார். சரியான தருணத்திற்குக் காத்திருக்கிறார். ஒரு சந்தர்பத்தில் காவலாளியை அடித்துப் போட்டு, வீட்டையே தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பிக்கிறார். சூப்பரான ஆக்ஷன் காட்சி அது.



நாய் துரத்துகிறது தப்பித்து ஒரு பாதுகாப்பான இடத்திற்கு போனபோது, சக பெண்போலீஸ் அதிகாரி சாண்டாவுவுக்கு போன் செய்கிறார். பால்நியூமனின் பெயரில் உளவி வந்த மெக்கிண்டோஷை எதிரிகள் கொன்று விடுகின்றனர். அதனால் பால்நியூமன் வெளியே வரமுடியாது என்கிறார். இதற்கிடையில் இவர்கள் தேடிவந்த ரஷ்ய உளவாளி ஜேம்ஸ்மேசன் சொகுசு கப்பலில் இருப்பதாக தகவல்கிடைக்கிறது. சாண்டாவும் பால்நியூமனும் அவனை போலீசிடம் பிடித்துக் கொடுக்க முயலும் போது  மாட்டி கொள்கிறார்கள்.


பால்நியூமன் கப்பலிலிருந்து தண்ணீரில் குதித்து தப்பிக்கிறார். கிளைமாக்சில் சாண்டாவை துப்பாக்கி முனையில் நிறுத்தி ஜேம்ஸ்மேசனும் ரஷ்ய உளவாளிகளும் தப்பிக்க முயலும் போது, சாண்டா இருவரையும் சரமாரியாக துப்பாக்கியால் துளைத்து விடுகிறார். சற்றே பழைய படமானாலும் விறு விறுப்பான காட்சி அமைப்புகளும் பால்நியூமனின் அலட்டிக் கொள்ளாத நடிப்பும் படத்தை சுவையானதாக்குகிறது.

No comments:

Post a Comment